Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

கி.ஆ.பெ. விசுவநாதம் படைப்பரங்க விழா

தேதி: 04-09-2023
இடம்: திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி முதுகலைத் தமிழ் ஆய்வுத்துறையின் சார்பாக கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்பரங்கம் கல்லூரி திருவள்ளுவர் கலையரங்கத்தில் இனிதே தொடங்கியது. இவ்விழாவில் படைப்பரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை உதவிப்பேராசிரியர் சமூகவியல் துறைத்தலைவர் (பொ)முனைவர் பொ.செந்தில்குமார் முதல்வர், சிறப்பு விருந்தினர், வாழ்த்துரை வழங்கும் தகடூர் புத்தகப் பேரவை பொறுப்பாளர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை ஆற்றினார், மேலும் சிறப்பு விருந்தினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது அடுத்ததாக முதுகலை தமிழாய்வுத் துறையின் தலைவர் முனைவர் டி.க. சித்திரை செல்வி பேசுகையில் சிறப்பு விருந்தினர் படைப்புகளில் அம்மா பற்றிய கவிதை தன்னை ஈர்த்தது என்று கூறி நல்லதொரு அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் வே. அன்பரசி அவர்கள் பேசுகையில் உலக மொழிகளில் முதன்மையான தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக இக்கல்லூரியில் தமிழ்த்துறை முன்னெடுத்துச் செல்வது மாணவர்களின் திறமையை வெளிக்குணரும் காரணியாக விளங்குகிறது என்று கூறி சீரியதொரு தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் பேசுகையில் 60% விழுக்காடு பாடப் புத்தகத்தின் வழி கற்பது 40 சதவீத விழுக்காடு வாழ்க்கை பாடத்தை படிப்பதால் மட்டும் தான் வாழ்க்கையை சிறப்பாக்குகிறது மேலும் பாடத்திற்கு வெளியே சென்று மார்க்சியம் பெரியாரியம் இது போன்றவற்றை வாசிக்க வேண்டும் என்றும் தமிழை வளர்ப்போம், தமிழை எட்டுத்திக்கும் கொண்டு செல்வோம் என்றும் நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்றும் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

திரைப்பட இயக்குனர் ஆசிரியர் மாரி. கருணாநிதி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்பேத்கர், பெரியாரையும் வாசிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் சிசுபாலன் அவர்கள் பேசுகையில் கேரளா போன்ற இடங்களில் வாசிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதால் தான் கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கிறது அதனைப் போல வாசிப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார். தகடூர் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கமணி பேசுகையில் கல்லூரி காலத்தில் கையில் கிடைத்தது எல்லாம் வாசித்தேன் இதன் தொடர்ச்சியாக இன்றளவும் வாசிப்பில் இருக்கிறேன் நீங்களும் வாசிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் பேசுகையில் படைப்பாளன் என்பவன் பதிவு செய்து வைக்க வேண்டும் அப்பொழுதுதான் பிற படைப்புகளைப் படைக்க முடியும் என்றார் வட்டார சொற்களை சேகரிக்கும் போது தான் மண்ணின் பெருமை மொழியின் சிறப்புகளை நன்குணர்ந்து அகராதியை படைக்க முடியும் என்று கூறி படைப்பாளன் உருவாவதற்கு அனுபவமே அடிப்படை காரணியாக திகழ்கிறது என்று கூறி முத்தானதொரு சிறப்புரையை ஆற்றினார் மேலும் அதனை அடுத்து மாணவர்கள் வினாக்களை எழுப்பி கலந்துரையாடினார்கள்.

இறுதியாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் அ. சுபா அவர்கள் நன்றியுரை கூறி நல்லதொரு உரை ஆற்றினார். இப்படைப் பறக்க விழாவினை தமிழ் துறை உதவிப் பேராசிரியர் சமூகவியல் துறை தலைவர் பொறுப்பு முனைவர் பொ.செந்தில்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI