Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

Student Orientation Programme for Freshers - 2023

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சி இன்று காலை 10 மணியளவில் முதல்வர்.வே.அன்பரசி தலைமையில் கல்லூரி திருவள்ளுவர் கலையரங்கத்தில், சிறப்பாக நடைபெற்றது. துறைத்தலைவர்கள் அனைவரும் அவர்தம் துறைகளுக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். முதல்வர் வே.அன்பரசி பேசுகையில், மாணவர்கள் கல்வியோடு, தனிமனித ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என்றார். மாணவர்கள் பாடப்புத்தகங்கள் படிப்பதோடு, தங்களது தனித்திறனையும் மேம்படுத்திட வேண்டும் என்றார். பெருந்திரளாக முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களும், துறைத்தலைவர்களும், உதவிப்பேராசிரியர்களும், கவுரவ விரிவுரையாளர்களும், அலுவலகப்பணியாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI