Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Small Grain Food Festival

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுத் திருவிழா இன்று 10-08-2023 முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது.

இப்போட்டியில் 50–க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறுதானியாங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றில் இனிப்பு மற்றும் கார உணவுகளை பார்வைக்கு வைத்தனர்.

இப்போட்டியின் நடுவர்களாக முனைவர் வீ.இரவி, இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கோ.ஐயப்பன், கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் வே.பசுபதி, வணிகவியல் துறைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்போட்டியில் மா.கிருஷ்ணன் (இளமறிவியல் இயற்பியல் மூன்றாமாண்டு) முதலிடமும் ம.முனியம்மாள், (இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு) இரண்டாமிடமும் இரா.நிதர்சனா, (இளமறிவியல் கணினி அறிவியல் இரண்டாமாண்டு) மூன்றாமிடமும் பெற்றனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் வே.அன்பரசி, அவர்கள் இவ்வருடம் சிறுதானிய வருடமாக கொண்டாடப்படுவதால் நமது பாரம்பரியம் மிக்க சிறுதானியங்களின் நன்மைகள் குறித்தும் சிறுதானிய உணவுகளை உண்பதால் நோயற்ற வாழ்க்கை வாழ முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் இ.சுஜிதா, அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI