Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

Menstrual Hygiene Management

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.07.2024 அன்று மதியம் 2 மணியளவில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாப்பிரெட்டிப்பட்டி கிளையிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற G.பெருமாள் மாவட்ட வள பயிற்றுநர், N.அருண்குமார் வட்டார மேலாளர், S.பூந்தளிர் வட்டார ஒருங்கிணைப்பாளர், M. முருகம்மாள் வாட்டார வள பயிற்றுநர், K.சுந்தரபாண்டியன் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் வரவேற்று தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் சுகாதாரம், இளம் வயது திருமணம் குறித்த கருத்துருக்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மாணவிகள், பெண் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்வின் நிறைவாக முனைவர் பா.சுதா, உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை அவர்கள் நன்றியுரையை ஆற்றினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI