Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Memorandum of Understanding at Salem Veranda with Race Training Institute

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் தகடூர் புத்தகப் பேரவை (தமிழால் இணைவோம்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தமிழ்த்துறையின் கி.ஆ.பெ. விசுவநாதம் படைப்பரங்கம் மாணாக்கர்களின் படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, தமிழறிஞர்களின் பிறந்ததினம் மற்றும் வார இறுதி நாட்களில் பேச்சு, கவிதை மற்றும் புத்தக வாசிப்பு என பல நிகழ்வுகளை நடத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக தருமபுரி தகடூர் புத்தகப் பேரவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது 28.05.2024 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி அவர்கள் மற்றும் பேரவையின் செயலாளர் மருத்துவர் இரா.செந்தில், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் டி.க.சித்திரைசெல்வி, தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் பொ.செந்தில்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்படி எதிர்வரும் ஆண்டுகளில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுவதற்கான பயிற்சி, மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல், படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரச் செய்தல் போன்றவற்றை பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இலவசமாக வழங்க உள்ளது

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI