Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

The State Level Seminar on Recent Trends in Mathematical Modelling

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி கணிதவியல் துறை ராமானுஜன் கணித மன்றம் சார்பாக " Recent Trends in Mathematical Modelling" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறை தலைவர் முனைவர் கோ. ஐயப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையுரையாற்றினார். முதல் அமர்வில் பேராசிரியர் முனைவர் எ. தண்டபாணி RIASM சென்னை பல்கலைக்கழகம் சென்னை-5 அவர்கள் "Importance of Differential Equations" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கணிதவியல் துறை கௌரவ விரிவுரையாளர் திரு.ஜே. பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மதியம் இரண்டாவது அமர்வில் முனைவர் தி.பத்மாவதி உதவிப் பேராசிரியர் கணிதவியல் துறை சவிதா தொழில்நுட்பக் கல்லூரி சென்னை அவர்கள் " Exploring the Intersection of Mathematics and Music in Gaming" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் இரா. ஜெயராமன் உதவிப் பேராசிரியர் அவர்கள் நன்றியுரையாற்றினார். செல்வி இரா. லோகேஸ்வரி முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி தொகுப்புரை வழங்கினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI