தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறையில் இராமானுஜன் கணிதமன்றம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி, அவர்கள் தலைமை தாங்கினார். கோயம்புத்தூர், CBM கல்லூரி, கணிதவியல் துறை உதவிப்போராசிரியர் முனைவர் சி.முத்தரசு, அவர்கள் ”Some Interesting Problems in Mathematics” என்ற தலைப்பில் உரையாற்றினார். முனைவர் கோ.ஐயப்பன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைத்தலைவர் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். முனைவர் இரா.ஜெயராமன், உதவிப்பேராசிரியர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் செ.சதீஷ், அவர்கள் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார். இந்நிகழ்வின் இறுதியாக முனைவர் பா.ராஜா, துனைத்தலைவர் ராமானுஜன் கணிதமன்றம் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வை சே.கோவிந்தராஜ் மூன்றாமாண்டு மாணவர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் மாணாக்கர்களுக்கு வினாடி-வினா (ம) PPT Presentation நடைபெற்றது வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.